சென்று வா உறவே சென்று வா
சென்று வா உறவே சென்று வா, ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
இது புதுமாரியான புதினம். இரண்டே இரண்டு பாத்திரங்கள். தமிழமுதன் வதனா. இருவரும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். இறுதியில் சென்று வா உறவே சென்று வா என்று காதலிக்கு விடை கொடுக்கும் தமிழமுதன் கண்ணீரோடு பிரிந்துவிடுகிறான். இந்தக் காதல் தொடரில் இலக்கியம், அறிவியல், பொதுவுடமை, தத்துவம், புராணம், வரலாறு என பல செய்திகளையும் கவிஞர் தியாரூ கலந்து கொடுத்திருப்பது நூலுக்கு சுவை சேர்க்கிறது. காதலைப் பற்றி நிறைய கதைகள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானது. நன்றி: தினத்தந்தி, 23/9/2015.
—-
ஒரு விடியலும் சில பறவைகளும், ஸ்ம்ரித்திராம், சிவாலயம் வெளியீடு, விலை 160ரூ.
கிராமிய பண்பாடு, கட்டுப்பாடு, பழக்கம், தலைமைக்குக் கட்டுப்படுவது போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.