நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல எழுத்தாளர் ரா. வேங்கடசாமி. அத்துடன் பிரதமர்களாக இருந்தவர்களுடைய வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றுள்ளது. பயனுள்ள நூல். குறிப்பாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.  

—-

கவின் கலைகள், ஸ்ரீமாருதி பதிப்பகம், சென்னை, விலை 110ரூ.

சட்ட நூல்கள் எழுதுவதில் புகழ் பெற்ற வழக்கறிஞர் எஸ். சேஷாச்சலம், இப்போது கலைகள் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். பரத நாட்டியம், கதாகாலட்சேபம் பற்றி நுட்பமான விவரங்கள் உள்ளன. புத்தகத்தின் பின்பகுதியில் புதுக்கவிதைகளும், பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *