சேதுபதியின் சேவைக்காரன்
சேதுபதியின் சேவைக்காரன், காவ்யா, சென்னை, விலை 350ரூ.
ராமநாதபுரம் என்ற சேது சீமையை ஆண்டவர்கள் சேதுபதிகள். அவர்கள் வரலாற்றில் நடந்த போதைக் களமாகக் கொண்டு இந்த நாவலை க.மனோகரன் எழுதியுள்ளார். சடையக்கத்தேவர் காலத்தில் மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் படைகள் ராமநாதபுரத்தைத் தாக்கும்போது நடக்கும் போரில் இருந்து கதை தொடங்குகிறது. அதே மதுரையை மைசூர் தளபதி முற்றுகையிட்டபோது, சேதுபதி விஜய ரெகுநாத தேவரின் உதவியை திருமலை நாயக்கரின் நாடினான். அதன் விளைவாக நடந்த மூக்கறுப்பு போர் வரை கதை நீள்கிறது. சேதுபதி மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்ததும், அவர்களின் படைத் தலைவர்களாக சேர்வை என்கிற சேர்வைக்காரர்கள் (அகமுடையார்) விளங்கியதும் இந்த நாவலில் பேசப்படுகிறது. நாவலைச் சுவை குன்றாமல் விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
உலகப் புகழ்பெற்ற தென்கொரிய டைரக்டர், ஜமாவன், நிழல்வெளியீடு, விலை 120ரூ.
தென்கொரியாவில் இப்போது சிறந்த சினிமா படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தென்கொரியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் கிம்-கி-டுக்கின், உலகப் புகழ் பெற்று விளங்குகிறார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை நிழல் பதிப்பகம் கிம்-கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.