தலைவர் பிரபாகரன்
தலைவர் பிரபாகரன், பன்முக ஆளுமை, ஓவியர் புகழேந்தி, தூரிகை வெளியீடு, விலை 230ரூ.
ஈழத்தில் வரைந்த கோடுகள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024221.html ஈழத்தில் நிலவிய சமாதானக் காலத்தில் அங்கு தமிழகத்தில் இருந்து பலதுறை விற்பன்னர்களை விடுதலைப்புலிகள் அழைத்து அவர்களின் திறன்களை கற்றுக்கொள்ள விழைந்தனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஓவியர் புகழேந்தி. அங்கு பலமுறை சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, புலி இயக்க உறுப்பினர்களுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். முக்கிய தளபதிகளுடன் கலந்துரையாடி இருக்கிறார். பிரபாகரனையும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் கொண்டு தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை என்ற இந்த நூலை எழுதி உள்ளார் புகழேந்தி. பிரபாகரனை இவர் பலமுறை சந்திப்பது கண்டு நீங்க என்ன அண்ணே, தலைவருக்கு செல்லப் பிள்ளை என்று அங்குள்ள புலி ஒருவர் கூறும் கூற்றில் இருக்கும் முக்கியத்துவத்தை பிரபாகரனுக்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிந்தவர் உணர்வர். தமிழக அரசில் இருந்த பல்வேறு துறைகளான காவல்துறை, நீதி நிர்வாகத்துறை, கடற்படை, விளையாட்டுத்துறை, வைப்பகம் போன்றவற்றைப் பற்றி தனித்தலைப்புகளில் இந்நூலில் எழுதி உள்ளார். கேணல் சூசை, மகளிர் அரசியல் அணிப்பொறுப்பாளர் தமிழினி போன்றவர்களுடன் சந்திப்புக்குப்பின் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. நூலை வாசித்து முடிக்கையில் இழப்புணர்ச்சிக்கு நம்மை ஆளாக்குவதே நூலின் வெற்றி. – அக்டோபர், 2015. நன்றி: அந்திமழை.