திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள்
திராவிடர் இயக்க நூற்றாண்டு வரலாற்றுச் சுவடுகள், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 40ரூ.
திராவிடர் இயக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கொண்டது. இதன் வரலாறு குறித்தும், இந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொருவரின் இன்றைய இனிய வாழ்க்கைக்கு திராவிடர் இயக்கமே காரணம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் பின்னிணைப்பாக, திராவிடர் சங்கம் தோன்றிய வரலாறு, நீதிக்கட்சி காலத்தில் சமூக நீதி ஆணைகள், சமூக சீர்திருத்த ஆணைகள் நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் திராவிடர் இயக்கம் குறித்து அறிய விரும்புவோருக்கும் அரிய கையேடு. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.
—-
இஸ்லாமும் பெண்ணியமும், எஸ்.கே.எஸ்.பப்ளிஷர்ஸ், விலை 50ரூ.
பெண்ணியம் என்றால் என்ன? என்பது முதல் மேற்கத்திய பெண்கள் வாழ்வில் இஸ்லாம் ஏற்படுத்தி வரும் மார்க்கங்கள் வரையிலான 6 கட்டுரைகளின் தொகுப்பு. பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கண்ணியம், உரிமை, சமத்துவம், பற்றி ஆசிரியர் பி. சிராஜுதீன் அழகுற எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.