தமிழர்தம் மறுபக்கம்

தமிழர்தம் மறுபக்கம், தமிழ்க்கோட்டம் வெளியீடு, விலை 175ரூ.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞர் க.ப. அறவாணன், இந்நூலில் இன்றைய தமிழர்கள் பற்றி பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்கிறது. அவர் கூறுகிறார்: வேட்பாளர் தேர்வில் சாதிக்கு முன்னிரிமை கொடுக்கப்படுகிறது. நாம் பெற்ற கல்வியால்கூட, நம்முடைய சாதிப்பற்றை தகர்க்க முடியவில்லை. சாதிய அடித்தளமே இல்லாத மண்ணில் தோன்றிய இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மதங்கள்கூட, இந்தியாவில் மதம் மாற்றம் பெற்ற கிருத்துவர்களிடையே சாதி அற்ற நிலையை தோற்றுவிப்பதில் தோற்றுப்போய் விட்டன. இவ்வாறு இன்றைய தமிழர் நிலை பற்றி, சிந்தனைக்கு உரிய கருத்துக்களை கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.  

—-

கவிஞர்களின் பார்வையில் காரிகைகள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 95ரூ.

சங்க காலத்து மகளிர் நலம், பெண்மையும் துறவும், கம்பனில் பெண்ணியம், சமயப் பெருவெளியில் பெண்ணியம், பாரத முதல் கவியரசர் வரை என்ற தலைப்புகளில் பெண்ணினத்தைத் தலைநிமிர வைத்த கருத்துக்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *