விகடன் மேடை

விகடன் மேடை, விகடன் பிரசுரம், விலை 435ரூ.

விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. அரசியல், சினிமா, சமூகம், எழுத்து போன்ற துறைகளில் பிரபலமானவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் சுவையாகவும்,சிந்தனைக்க விருந்தாகவும் அமைந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் தொடங்கி டிராபிக் ராமசாமி வரை 40 பேர்களின் பதில் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பழ. நெடுமாறன், வைகோ, மு.க. ஸ்டாலின், திருமாவளவன், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கவிஞர்கள் வைரமுத்து, வாலி எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன், நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், இயக்குனர்கள் எஸ். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், ஷங்கர், பாலா ஆகியோரின் பதில்கள் நெஞ்சைத் தொடுகின்றன. மேலும் நடிகர்கள் விஜய், சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சந்தானம், நடிமை குஷ்பு ஆகியோரின் கேள்வி – பதில்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.  

—-

இந்திரா காந்தி வரலாறு, கவிஞர் நெல்லை ஆ. கணபதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ.

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக – சுவைபடக் கூறும் நூல். இளைய தலைமுறையினருக்கு பரிசளிக்க உகந்த நூல். நன்றி: தினத்தந்தி, 18/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *