அண்ணா அருமை அண்ணா
அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ.
பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் ‘அண்ணா அருமை அண்ணா’ என்ற அருமையான நூலை படைத்து உள்ளார். இந்த நூலில் அண்ணாவின் அரசியல் நாகரீகம் தொடங்கி அவருடைய நிர்வாகத் திறமை வரை அண்ணாவின் அனைத்து முகங்களும் வெளிக்காட்டப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் அண்ணா பற்றாக்குறை பட்ஜெட் என்ற நிலையில் ஆட்சிக்கு வந்து, விரைவிலேயே உபரி பட்ஜெட்டாக மாற்றிய திறமையை இந்த நூலில் எடுத்துக்காட்டி உள்ளார். இந்த நூலை படித்து முடிக்கும்போது அண்ணாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட மனநிறைவை பெறமுடியும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.