சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை
சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ.
சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், ‘கலைச்சொல் விளக்கம்’ பின்னிணைப்பில் அமைந்துள்ளதும் சிறப்பம்சமாகும். சின்னத்திரை இன்று நம் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், சினிமாவிற்கும், வீடியோவிற்குமான இந்த தொழில் நுட்பக்கலை நூலை சரளமாகப் படிக்கக்கூடிய எளிய நடையில், சிரமமின்றிப் புரிந்துகொள்ளக்கூடிய அளவில் உதாரணங்களுடன் விளக்கங்களுடனும் படைத்திருக்கிறார் முனைவர் வெ.மு. ஷாஜகான் கனி. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.