வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ.

தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த கிறிஸ்டோபர் ரீவஸ், விபத்து ஒன்றில், உடலின் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் போனது. அதன்பின் மாற்றுத்தினாளிகளுக்காக அறக்கட்டளை துவங்கினார். சக்கர நாற்காலியில் உலகெங்கும் பயணித்து நிதி திரட்டினார் என, அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆசிரியர், இறுதியாக ஒரு கேள்வியோடு முடிக்கிறார். ‘சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாத ஒரு மனிதரால் போராட முடிகிறது என்றால், நம்மால் முடியாதா?’ -சி. சுரேஷ். நன்றி: தினமலர், 13/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *