எனது வாழ்க்கைப் பயணம்
எனது வாழ்க்கைப் பயணம், மருத்துவர் சு. முத்துசாமி, தாய்த்தமிழ்ப்பள்ளி வெளியீடு, பக். 360, நன்கொடை 200ரூ.
ஒரு குக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து, படித்து இன்று சிறந்த மருத்துவராக விளங்கும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கைப் பயணத்தை கதைபோல் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.
—-
அருட்பெருஞ்சோதி நாட்டிய நாடகம், அருள்பாரதி, ஸ்ரீஅலமு புத்தக நிலையம், பக். 80, விலை 55 ரூ.
வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்கள் படித்து நாடகமாக நடிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்ட நாடகநூல் வடலூர் வள்ளலாரை அறியாதவர்கள் இந்நூலைக் கற்றாலே முழுமையாக உணர்ந்து இன்புறத்தக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.