இனிதே தொடரும் வானப்ரஸ்தம்

இனிதே தொடரும் வானப்ரஸ்தம், விஜயலட்சுமி சுந்தரராஜன், காவ்யா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ.

காலவெள்ளத்தில் தோன்றிய முதியோர் இல்லங்களின் தேவை, அவசியத்தை பற்றி பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் முதியோர் இல்லத்தில்தான் வசிக்கிறார். ‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நிர்ப்பந்தங்களுக்காக, பெற்றோரைக் கவனிப்பதாக கூறி, நம்மையும் வருத்தி பெற்றோரையும் சிறுமைப்படுத்தினோம். வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பிள்ளைகள், சம்பளத்தையும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பெற்றோருக்காக விட்விட்டு வரவேண்டுமான என்று யோசிக்கும் தலைமுறை’ (பக். 76) என, காலமாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முதியோர் இல்லங்களில் இருப்பது கேவலம் என நினைக்காமல், சில நாட்கள் அங்கு சென்று தங்கி, வசதிகளைப் பற்றி தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம் என்கிறார், நூலாசிரியர் (பக். 64). முதியோரின் இன்றைய தேவையான பொருளாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை கிடைப்பது முதியோர் இல்லத்தில்தான் (பக். 77), முதியோர் இல்லம் நடத்துவோரின் நோக்கம், பிரச்னைகள், நெருக்கடிகள் என, மறுபக்கத்தையும் காட்ட, நூலாசிரியர் தவறவில்லை. -திருநின்றவூர் ரவிக்குமார். நன்றி: தினமலர், 6/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *