சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், மொழிபெயர்ப்பு சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ.

2,300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் மகத நாட்டு எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த சாணக்கியர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் கரைகண்டவர். அவர் ‘கௌடில்யர்’ என்கிற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலின் நுணுக்கங்கள் இன்றளவும் அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளால் விவாதிக்கப்படுகின்றன. இது தவிர வாழ்வியல் குறித்தும் சில நீதி சாஸ்திரங்களை எழுதி இருக்கிறார் சாணக்கியர். அவற்றில் பிரதானமானது சாணக்கிய நீதி.

இந்நூல் அந்தரங்க வாழ்க்கைக்கு ஒரு மறைமொழியாகவும், அரசியல் வாழ்க்கைக்கு பெருநெறியாகவும் விளங்குகிறது. தனிமனித வாழ்க்கை, சமூகம், அரசியல் என பல்வேறு விஷயங்களை பற்றிய சிந்தனைகள் அடங்கிய தொகுப்புதான் சாணக்கிய நீதி.

இந்நூலில் சாணக்கியர் தன்னுடைய சிந்தனைகள் மற்றும் அறிவுரைகளை ஸ்லோகங்களாக வடித்து, அதற்கான பொருளையும் விளக்கமாக எடுத்துரைத்திருக்கிறார்.

தமிழ் வாசகர்களும் படித்து பயன்பெறும் பொருட்டு சாணக்கிய நீதி நூலை சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர் சந்தியா நடராஜன்.

நன்றி: தினத்தந்தி, 25/7/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027101.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *