ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஜாதியை அழித்தொழிக்கும் வழி, பி.ஆர். அம்பேத்கர், தலித் முரசு, விலை 120ரூ.
இந்திய சமூகங்களில் புரையோடி கிடக்கும் சாதி எனும் கொடிய நோய்க்கு எதிராக போராடியவர்கள் பலர். அவர்களில் அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் முக்கியமானவர். நாடு விடுதலைக்கு முன் லாகூரில் நடைபெற இருந்த கூட்டம் ஒன்றுக்காக சாதி ஒழிப்பு தொடர்பாக அவர் தயாரித்த உரையின் சாரம்சமே இந்த புத்தகம்.
சாதியை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய தான் காட்டிய வழியிலோ அல்லது தங்கள் சொந்த வழிகளிலோ முயலுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அம்பேத்கரின் உளத்தாகம் உண்மையில் பிரமிப்பூட்டுகிறது. இந்த உரைக்கு மகாத்மா காந்தியின் எதிர்வினையும், அதற்கு அம்பேத்கரின் பதிலுரையும் கூட புத்தகத்தில் அடங்கியிருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027159.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818