தமிழ் இலக்கிய அகராதி
தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், அர்ஜித் பதிப்பகம், விலை 460ரூ.
பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும், உரைநடைகளிலும் உள்ள கடினமான சொற்களுக்குப் பொருள் தெரியாமல் இனியும் அவதிப்படத் தேவை இல்லை என்ற நிலையை இந்தப் புத்தகம் தருகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படி ஆவணப்படுத்தி அந்தச் சொற்களுக்கு எளிய விளக்கத்தை இந்த நூல் தருகிறது.
நல்ல வழிகாட்டி போல அமைந்து இருப்பதால், இந்த நூல், பழைய இலக்கியங்களைப் பொருள் உணர்ந்து படிக்க மிக்க பயன் உள்ளதாக இருக்கும். பேச்சு வழக்கில் உள்ள வடசொற்கள், சாஸ்திரம் சம்பந்தமான சொற்கள் ஆகியவற்றுக்கும் பொருள் தந்து இருப்பது சிறப்பு.
இவற்றுடன் பழங்கால இலக்கியங்களின் பட்டியலாக ‘நூல் அகராதி’, பழங்காலப் புலவர்கள் பற்றி அறிந்து கொள்ள ‘புலவர் அகராதி’ மற்றும் ‘பிரபந்த அகராதி’ , ‘தொகை அகராதி’ ஆகியவற்றையும் தந்து இருப்பதால் இந்த நூல் தமிழ் ஆர்வலர்களுக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும்.,
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029719.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818