அச்சுதம் கேசவம்
அச்சுதம் கேசவம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 310ரூ.
வேர்களின் கதை
அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய இரா. முருகனின் நாவல்கள் வரிசையில் மன்றாவதாக வெளியாகியிருக்கிறது அச்சுதம் கேசவம். இந்நாவலில் சிறு கதையாடல்கள் மூலம் கதையோட்டத்தை முன்னோக்கி செலுத்துகிறார் முருகன்.
அரசூரைச் சேர்ந்த உறவுகள் காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேர்களை உணர்ந்தறிவதே இந்த நாவலின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். பெரும் திருப்பங்களோ, நாடகார்த்த நிகழ்வுகளோ இல்லாமல் அதே சமயம் சுவாரசியமான தனிமனிதர்களின் கதைகளைச் சொல்லிக்கொண்டே செல்கிறார் எழுத்தாளர்.
கதையின் எல்லா சரடுகளிலும் வந்துஆடுகிறது மயில், அரசூரில் இருந்து பரவியிருக்கும் வேர்களை நினைவூட்டும் குறியீடாக. முப்பது ஆண்டாக ராமாயணம் சொல்லத்திட்டம் போட்டிருக்கும் பஞ்சாபகேச சிரௌபதிகள், சாவே நிகழாத அரசூர் ஆங்கிலப்பத்திரிகையில் தலைப்புச் செய்தி ஆவது, ஹரித்வாரில் உயிர்விடும் லோகேஸ்வரிப்பாட்டி, மீரட்டில் நயம் கத்திரிக்கோல் கிடைக்குமாமே என்கிற பெண்கள், ப்ரெஞ்சுக்கார அமேயர் பாதிரியார், லண்டன் கென்சிங்க்டன் வீட்டில் பேயாக உலவும் ஆல்பர்ட் பிரபு… இரா. முருகன் அறிமுகப்படும் உலகம் மிகவும் புதுமையாகவும் தூய்மையாகவும் இருக்கிறது!
கனவுகளும் நனவுகளும் பின்னிப்பிணைந்திருக்கும் இந்நாவலின் மொழி, வாசகருடன் நெருக்கமாக உரையாடக்கூடியது.
நன்றி: அந்திமழை, 2016.