M.G.R. எழுத்தும் பேச்சும்
M.G.R. எழுத்தும் பேச்சும், தொகுப்பாசிரியர் வே. குமரவேல், முல்லை பதிப்பகம், விலை 250ரூ.
எழுத்தும் பேச்சும்
எம்.ஜி.ஆர். இன்று வழிபடப்படும் ஓர் அரசியல் பிம்பம். அவரது பேச்சும் எழுத்தும் என்று எதுவும் இன்றைய இளைஞர்கள் அறிய அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பக்கூடியது எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும் என்கிற இருபாகமாக வந்திருக்கும் தொகுப்பு.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கும் மன்னும் பின்னுமாக நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்பாடலில் இருந்திருக்கிறார். வெறுமனே தன்னுடைய திரைபிம்பம் எழுப்பித் தந்த கவர்ச்சியை மட்டும் அவர்பயன்படுத்தினார் என்று சொல்லிவிடமுடியாது.
ஆனால் அவர் அடுக்கு மொழி பேசியதில்லை. கவர்சிகரமான சொல்லாடல் அவரிடம் இல்லை. ஆனால் அவரிடம்தான் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன? ஏன் உங்கள் படங்களில் ஸ்டண்ட் காட்சிகள்? வாலிபத்தை கடந்து இளைஞனாக ஏன் நடிக்கிறீர்கள்? நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா? எல்லாவற்றுக்கும் அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
கந்தனின் கனவு என்ற பெயரில் 1962ல் எம்.ஜி.ஆர். எழுதிய சிறுகதைகூட இந்தத் தொகுப்பில் உள்ளது. எம்.ஜி.ஆர். என்கிற ஆளுமையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவக்கூடிய நூல் இது.
நன்றி: அந்திமழை, 2016.