இலக்கிய ஆளுமைகள்

இலக்கிய ஆளுமைகள், மு. விவேகானந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150 அறிஞர்களின் ஆளுமைகளை முன் நிறுத்தும் நுால். பாரதியும் இதழ் இயலும் என்ற கட்டுரை, எழுதுகோலும் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்பதை நிரூபிக்கிறது. சுதேசமித்திரன் துணை ஆசிரியராக, 17 ஆண்டுகள் அவர் எழுதுகோல் ஓயவில்லை. கேலிச் சித்திரம் வெளியிட்டவர். வாசகர் அனுப்பும் செய்திகளுக்கு சன்மானம் கொடுத்தது முதன் முதலில் பாரதி தான். சிறுகதை உலகின் சிகரத்தை எட்டிய புதுமைப்பித்தன் பற்றிய ஆளுமைக் கட்டுரை மிகவும் அருமை. சிறுகதை என்றால் சிக்கல், பின்னல், எழுச்சி, முடிவு இவற்றுக்கு […]

Read more

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல்

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலா, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 தேர்தல் குறித்த கருத்துகளை 1980-களின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிவரும் நிபுணர் பிரணாய் ராய், கள ஆய்வு நிபுணர் தொராய் ஆர்.சொபாரிவாலா இருவரும் இணைந்து இந்தியாவின் தேர்தல்கள் குறித்த சிறந்ததொரு நூலை எழுதியிருக்கின்றனர். ‘தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற பெயரில், ச.வின்சென்ட்டின் தமிழாக்கத்தில் இப்போது ‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கிறது. இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, பல்வேறு பிரிவு சமூகத்தினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு […]

Read more

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், தி.ஜானகிராமன், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி […]

Read more

சைவ சமயம்

சைவ சமயம், மா.இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலைரூ.100 சைவ சமயம் பற்றி அறிமுகம் செய்யும் நுால். சமயம் என்பது சமைத்தல் எனும் வேர்ச்சொல்லில் பிறந்தது என்கிறார். வாழ்வை பக்குவமடையச் செய்தல் என்ற பொருளில் கூறுகிறார். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக, சைவ சமயத்தை அணுகி, தகவல்களை பதிவு செய்துள்ளார். சங்க காலத்துக் கோவில்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். கால எல்லையை கடந்து பார்க்கும் நுால். – த.பாலாஜி. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030647_/ […]

Read more

தமிழகக் கலைகள்

தமிழகக் கலைகள், மா. இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலை ரூ.100. ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார். நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல […]

Read more

கல்யாணி

கல்யாணி, வல்லிக்கண்ணன், காவ்யா பதிப்பகம், ரூ.580. படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால். கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது! – எஸ்.குரு. நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி

பன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி, டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை ரூ.300 ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், மணிலா நகரிலிருந்து வேரித்தாஸ் வானொலியில், 1976 முதல், தமிழ்க் குரல் ஒலிக்கத் துவங்கியது. சுமையான பெரிய வால்வு ரேடியோ குறைந்து, டிரான்சிஸ்டர் வரத் துவங்கிய காலம் அது. நீண்டநேரம் காத்திருந்து, இந்த வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டவர்கள் பலர். அழகிய தமிழில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இன்றைய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்போருக்கு பெரும் பாடம். இன்றைய தொகுப்பாளர்கள், அந்த குரலை கேட்டு படிக்க வேண்டும்.அப்போது தான், எவ்வளவு […]

Read more

வைசூரி நோய் மருத்துவம்

வைசூரி நோய் மருத்துவம்,  எஸ்.சிதம்பர தாணுப் பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்டரேச்சர் ரி சர்ச் சென்டர், விலைரூ.350 மனித இனத்தையும், பருவ காலங்களையும் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாது. பருவ கால மாற்றங்கள், மனித நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற மக்களைப் பலவகையிலும் வாட்டி வதைப்பது வைசூரி நோய். அது முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என, விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 64 வகை வைசூரி நோய்கள் விளக்கப்பட்டுள்ளன. வைசூரிக்கான காரணம் துவங்கி, நோயின் தன்மை, அறிகுறி, வீரிய விளைவு, பின் விளைவு, மருத்துவ […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலைரூ.500. கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால். கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய […]

Read more

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, கிஷோர் பிரசாத், பாரதி புக் ஹவுஸ், பக். 108, விலை 60ரூ. மகாத்மாவின், 150ம் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நூல். காந்தியின் அரிய புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் அவை அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டி, மனதில் எழுச்சி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மகாத்மா என்பது மாபெரும் கடல். நீந்தி களிக்க நிறைய உண்டு. அந்த கடல் பற்றி எளிய அறிமுகமாக உள்ளது இந்த நூல். நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 121 122 123 124 125 505