லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. லஞ்சம் எனும் அரக்கன் இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம். லஞ்சம் […]

Read more

திருப்பல்லாண்டு வ்யாக்யானம்

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ‘திருப்பல்லாண்டு வ்யாக்யானம்‘, தொகுப்பாசிரியர் அ. கிருஷ்ணமாச்சார்யர், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 155. நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு பெரியவாச் சான்பிள்ளை வியாக்யானம் அருளிச் செய்துள்ளார். அதில் உள்ள திருப்பல்லாண்டுக்கான வ்யாக்யானம் மட்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என்று, முதல்பாட்டு தொடங்குகிறது. இப்பாடலுக்கு பதவுரை, அவதாரிகை, வ்யாக்யானம் என ஒவ்வொன்றும் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. உச்சரிக்கும் சொல்லுக்குள்ள அர்த்தபேதங்களையும் (பொருள் வேறுபாடு) தனியாக எடுத்துரைக்கின்றார். இப்படியாக பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்… […]

Read more

வங்கமொழிச் சிறுகதைகள்,

வங்கமொழிச் சிறுகதைகள், தொகுப்பு 3, தொகுப்பாசிரியர் அஷ்ருகுமார் சிக்தார், தமிழில் பெ. பானுமதி, சாகித்திய அகாதெமி, பக். 576, விலை 400ரூ. மொத்தம் 28 சிறுகதைகள். மேற்கு வங்கத்தின் ரத்தமும் சதையுமாக! இந்தக் கதைகள் வங்காளிகளின் வாழ்க்கையை விரிவாகவும் ஆழமுமாகக் காட்டுகிறது. மேற்கு வங்க மாநிலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகவே இருந்துள்ளது. இங்கே மாவோயிஸ்டுகளும் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இங்கும் நகரம் இருக்கிறது. படிப்பறிவில்லாத கிராம மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொகுப்பின் சில கதைகள் பொதுத்தன்மை கொண்டிருந்தாலும் […]

Read more

சப்தமில்லா சப்தம்

சப்தமில்லா சப்தம் (ஜென் கதைகள் குறித்த உரைகள்), ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. ஐந்து அற்புதமான ஜென் கதைகளின் மூலம் வெளிப்படும் ஓஷோவின் வாக்குகளே சப்தமில்லாமல் நம் இதயத்தை ஊடுருவிச் சென்று பலவித சப்தங்களை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. ‘மனித அனுபவத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் கருணைக்கு நெருக்கமானது. மக்கள் அதை அன்பு என்கிறார்கள். அதை அப்படி அழைக்கலாகாது. அன்பைவிடவும் அது கருணைக்கு நெருக்கமானதாகக் காணப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தாயாகவே […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. தமிழினத்தின் இணையில்லாப் பெருமையை, பண்பாட்டை, வரலாற்றை, இலக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்நூல். தமிழகத்தின் நிலஇயல் பிரவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க்கிளை இனங்களும் கிளைகளும்,தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும் என 16 தலைப்புகளிலான கட்டுரைகள் உள்ளன. கி.பி. 50க்கும் – கி.பி.150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மூவேந்தர்களையும், அவர்களில் கரிகாற்பெருவளவன், கிள்ளிவளவன், நெடுஞ்செழியன், பெருஞ்சேரல் இரும்பொறை உள்ளிட்டோரையும் குறித்துப் பேசுகின்றன, சேரர், பாண்டியர், சோழர் என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகள். […]

Read more

இந்துத்துவ அம்பேத்கர்

இந்துத்துவ அம்பேத்கர், ம. வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149673.html தீண்டாமை காரணமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவியவர் அம்பேத்கர். அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும் கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி? இந்நூல் இக்கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறது. இந்துத்துவர்களும் அம்பேத்கரும் சிந்தனை ரீதியாக ஒத்திருக்கும் இடங்களை நூலாசிரியர் இந்நூலில் […]

Read more
1 503 504 505