கம்பனின் அரசியல் கூட்டணி

கம்பனின் அரசியல் கூட்டணி, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. கடந்த காலத்தில் படைக்கப்பட்ட ஓர் இலக்கியம், நிகழ்காலத்தில் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்நூல். கிஸ்கிந்தாவில் சுக்கிருவனின் உதவியை ராமன் நாடவேண்டி வருகிறது. ஏனெனில் சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன் என்பதைத் தெரிந்து கொண்டபின், தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், துயரில் சிக்கிவிட்ட மனையாளை மீட்கவும், வலிமை மிக்க, வரபலம், படைபலம், தம்பியர் துணை, ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ராவணனை எதிர்க்க இருவரின் வில்கள் மட்டுமே போதாது […]

Read more

விலை மதிக்க முடியாத உயிர்கள்

விலை மதிக்க முடியாத உயிர்கள், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. தி.மு.க.வின் இலக்கிய அணி புரவலரான முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி ஏற்கனவே 3 நூல்களை எழுதி இருந்தாலும், தற்போது ‘விலை மதிக்க முடியாத உயிர்கள்’ என்ற தலைப்பில் 19 சரித்திர பெண் மணிகளின் விலை மதிக்க முடியாத, வீரமிக்க, மனிதாபிமானமிக்க செயல்களை கவிதையாக படைத்து உள்ளார். இதில் பலர் தியாகங்களும், இதுவரையில் முழுமையாக வெளிவராத தியாகங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த விடுதலை போரில் இன்னுயிர் நீத்த பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அங்கையற்கண்ணி, […]

Read more

மூக்கூடல்

மூக்கூடல், வா,மு,சே, ஆண்டவர், சேதுச் செல்வி பதிப்பகம், விலை 150ரூ. இலக்கணவியல், இலக்கியவியல், அயலகத் தமிழியல் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல், “முக்கூடல்” என்ற பொருத்தமான தலைப்புடன் வெளிவந்துள்ளது. முதல் பகுதியில், தொல்காப்பியர் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன. இரண்டாம் பிரிவான இலக்கியவியலில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார், முனைவர் பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர். அயலகத்தமிழியல் என்ற மூன்றாம் பகுதியில், அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் வளர்ச்சிக்கு எடுத்து வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விவரிக்கிறார். இந்த நூலில் உள்ள […]

Read more

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம், ஜி. சந்தானம் ஐ.ஏ.எஸ்., நேசம் பதிப்பகம், விலை 175ரூ. 40 ஆண்டு காலம் தமிழக அரசில் எல்லோரும் பாராட்டத்தக்க அளவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி. சந்தானம் எழுதிய ‘வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்’ என்ற இந்த நூலில், வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் எல்லோரும் சந்தித்ததும், அதே நேரத்தில் சரியாக புரிந்து கொள்ளாததுமான பல விஷயங்களை சுட்டிக்காட்டி உள்ளார். ‘அரசு அலுவலகம் என்றால் கதவுகளும் காசு கேட்கும், கம்பியும் கை நீட்டும்,’ என்ற சாமானிய மக்கள் […]

Read more

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள்

பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், தொகுதி 1, விலை 330ரூ, தொகுதி 2-3 விலை 250ரூ(ஒவ்வொன்றும்). மறைந்த பேரறிஞர் அண்ணா எழுதிக் குவித்த கதைகளும், கட்டுரைகளும் ஏராளம். அவற்றில் சிறு கட்டுரைகளை தேர்வு செய்து, மூன்று புத்தகங்களாக வெளியிட்டுள்ளது பூம்புகார் பதிப்பகம். 1937ம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து 1948ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை வரை, இந்நூல்களில் காலவரிசைப்படி இடம் பெற்றுள்ளன. பல்வேறு பொருள்கள் பற்றி அண்ணா ஆழமாக ஆராய்ந்து, தமக்கே உரிய பாணியில் காரசாரமாகவும், நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் தமது கருத்தை […]

Read more

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம், செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 142, விலை 90ரூ. சமகால வரலாற்று ஆவணம்! திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல் ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல் ‘சுதேச மித்திரன்’தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, 1907ம் ஆண்டில், குருமலை சுந்தரம் பிள்ளை என்பவர், […]

Read more

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 244, விலை 170ரூ. எதிர்ப்பு நிலையும் இருப்பு நிலையும் ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற்போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, 20ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் […]

Read more

வேந்தன் சிறுகதைகள்

வேந்தன் சிறுகதைகள், வேந்தன், பண்மொழி பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில், இடதுசாரி சிந்தனையாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் சாதாரண தொழிலாளியாக இருந்து, தன் பார்வையை சிறுகதைகளாக செதுக்கியவர்களில் பி.டி.சிரிலும் ஒருவர். வேந்தன் என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மனிதநேயத்துடன் சாதாரண மனிதர்களை பற்றியும், தன்னை சுற்றிய நிகழ்வுகளையும் கதைக் கருவாக கொண்டு எழுதியுள்ளார். சாதாரண நிகழ்வும், அன்றாட வாழ்க்கையின் பாதிப்பும் அற்புதமான கதைகளாக நம்முன் உருவெடுத்து நிற்கின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வையும், உழைக்கும் வர்க்கம் […]

Read more

இந்திய நேரம் 2 A.M

இந்திய நேரம் 2 A.M., பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், பக். 168, விலை 125ரூ. பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று இது. 1986ல், முத்தாரம் இதழில் தொடராக வந்தது. மகேந்திரன், ஒரு தொழிலதிபர். அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஸ்வர்ணா. மகேந்திரனின் பர்சனல் ஸ்டெனோ. ‘ஒரு துணைக்காக ஏங்கறேன் நான். என் மனைவி என்னை விட்டுவிட்டுப் போய் 12 ஆண்டுகள் ஆகின்றன. என் மேல் அக்கறை காட்ட, அன்பு செலுத்த யாருமில்லை. பசித்தாலும் கேட்க ஆளில்லை. என் தேவைகளை நானே […]

Read more

அஸ்தினாபுரம்

அஸ்தினாபுரம், ஜோ டி குருஸ், காக்கை பதிப்பகம், பக். 416, விலை 380ரூ. துறைமுக அவலத்தை தோலுரித்துக் காட்டும் நாவல்! ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள். ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பதுதான் அஸ்தினாபுரம் நாவலின் கதை. கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது உண்டான விதம், விரிந்து பரந்த் விஸ்தாரம் எல்லாம் அழகாகச் சொல்லப்படுகிறது. நாவல் சொல்லப்படும் விதத்தில், ஆசிரியரின் முழு […]

Read more
1 501 502 503 504 505