அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. இருபத்தோராம் வயதில் ஞானம் பெற்ற ஆன்மிக அறிஞர் ஓஷோ, சிறப்பு டைனமிக் தியான முறைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் சீடர்கள் மத்தியிலும், தம்மைச் சந்திக்க வந்தவர்கள் நடுவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் 650 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உன்னதமான ஜந்து ஜென் கதைகள் மற்றும் சீடர்கள் கேட்ட கேள்விகளின் துணையுடன், தியானம் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கங்களை ஓஷோ இந்த நூலில் விளக்குகிறார். மனதின் செயல்பாடுகள் பற்றியும், அதை ஆராய்ந்து […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ. குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். இரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் நாட்டில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களை விவரிக்கும் நூல் இது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “கல்கி ராமகிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ். வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, “சாவி” முதலியோர் பத்திரிகைத்துறையில் எதிர்நீச்சல்போட்டு சாதனைகள் புரிந்ததை ஆசிரியர் நடுநிலையுடன் எழுதியுள்ளார். தமிழில் இதழியல் துறை பற்றி நூல்கள் அதிகம் இல்லை என்ற குறையை, இந்தப் புத்தகம் போக்கியுள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் […]

Read more

எழுக தமிழ்நாடே…!

எழுக தமிழ்நாடே…!, டாக்டர் ச. ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தொகுதி 5, விலை 250ரூ. இந்த ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமராஸ் பிறந்தநாள் பவளவிழா ஆண்டாகும். தங்கள் தலைவரின் பவளவிழா ஆண்டு நிறைவாக கொடுக்கும் பெரிய பரிசாக பா.ம.க.வினர், அவர் ஆற்றிய உரைகள், விடுத்த அறிக்கைகள் மற்றும் அவருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள் 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். “எழுக தமிழ்நாடே” என்ற தலைப்பில் எழுதப்பட்ட தொகுப்பில் கூறப்பட்டுள்ள தமிழீழம் – மீனவர்கள் பிரச்சினை, கல்வி, ஆற்றுநீர் பிரச்சினை, சமூகநீதி, மதுவிலக்கு, வேளாண்மை, […]

Read more

சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள்

சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 210ரூ. குடும்ப பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கணவன் – மனைவி உறலில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்வதற்கும், தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும், நோய்களை குணமாக்குவதற்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —– 12 ராசிகளும் குணங்களும், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. 12 ராசிக்காரர்களும் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும், பொதுவான குணங்கள் என்ன என்பதை விவரிந்துள்ளார், டாக்டர் கே. என். சரஸ்வதி. […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு, விலை 200ரூ. ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும், ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும் நூல். ஆதிசைவர்களின் வரலாற்றை இதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —- தந்தை கோரியோ, சாகித்திய அகாதெமி, விலை 220ரூ. 19ம் நூற்றாண்டில் பாரிசு நகரத்தின் நாகரீக வாழ்வு யார் யாரை எப்பாடுபடுத்தியது என்பதை விளக்குவதே இந்நாவலின் நோக்கம். பாரிசு நகர மக்களின் பண்பாடு, பழக்க […]

Read more

தென்மொழி

தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற […]

Read more

தென்னாட்டுச் சிற்பி ஜீவா

தென்னாட்டுச் சிற்பி ஜீவா, சங்கர் பதிப்பகம், விலை 90ரூ. சிறு வயதிலிருந்தே மக்கள் நலனுக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வாலிப்திதிலேயே தீண்டாமையையும், சாதி அமைப்பையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினார். பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார். அரசியலில் பங்கு பெற்ற காலத்தில் சிறைவாசம், காவல்துறையினர் தாக்குதல்கள், தலைமறைவு வாழ்க்கை என்பது அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளாக இருந்தன. அவர் தனது லட்சியத்தை மக்களுக்கு கொண்டு செல்வதில் பன்முகத்தன்மை கொண்ட தலைவராக […]

Read more
1 500 501 502 503 504 505