பாலகுமாரனின் முகநூல் பக்கம்

பாலகுமாரனின் முகநூல் பக்கம், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. முகநூலில் முன் தகவலாக பதிவு செய்த விசயங்களை தொகுத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன். “உள்ளே கிடப்பது பற்றி அறிவீரோ? நான் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் எந்த செயலும் செய்யாது. இந்த நிலை எப்படி வரும். உள்ளே உள் மனதை உற்று பார்த்தபடி இரு. முதலில் திணறும். மனம் ஓடும். இழுத்து நிறுத்த வேணும். ஏதோ ஒரு சமயம் மனம் வசப்படும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிரு. இது முக்கியம். மனம் கவனிக்க […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ. அவ்வையார் எழுதிய ஆத்திசூடி நூலுக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னுடைய புதிய படைப்பை கொடுத்தவர் பாரதியார். அந்த புத்தகத்துக்கு இன்னும் மெருகேற்றி எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை) என்ற தலைப்பில் முனைவர் நா. சங்கரராமன் ஒரு புதிய நூல் வெளியிட்டு உள்ளார். இதில் ‘நம் உயர்வான எண்ணங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ போன்ற உயரிய கருத்துகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக நேர்த்தியாக உரை எழுதி இருக்கிறார். அச்சம் […]

Read more

கிருதயுகம்

கிருதயுகம், பேராசிரியர் ந. வேலுசாமி, விலை 250ரூ. சேலம், நாமக்கல் பகுதியில் வாழும் ஒரு சமூகத்தினரின் கலாச்சாரம், பொருளாதாரம், பழக்க வழக்கங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார், பேராசிரியர் ந. வேலுசாமி. வட்டார வழக்கில் எழுதுவது கடினம். அதை வெகு இயல்பாக எழுதியுள்ளார். ஆசரியருக்கு இது முதல் நாவல் என்பதை நம்ம முடியவில்லை. நிறைய நாவல்கள் எழுதி பக்குவப்பட்டவரின் படைப்பு என்று சொல்லத்தக்க வகையில் நாவல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- ஸ்ரீகந்தபுராணம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 45ரூ. […]

Read more

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பு காவ்யா சு. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 900ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் முதல் முறையாக முழு அளவில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தமிழரின் சமயநெறி, தமிழரசு கழகம் ஏன் வந்தது? சீறாப்புராண சொற்பொழிவுகள், வள்ளல் சீதக்காதி வரலாறு, பத்ர் போரின் பின் விளைவுகள் மாதம் இருமுறை வெளியான ‘ஒளி’ தலையங்கங்கள் […]

Read more

நகைச்சுவை மன்னர் கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலைவாணர், முனைவர் இராம. இராமகுமார், செம்மூதாய் பதிப்பகம், விலை 60ரூ. கலைவாணர் என்றால், அது என்.எஸ். கிருஷ்ணன் ஒருவரையே குறிக்கும். உலகப் புகழ் பெற்ற மேல் நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு இணையானவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர். ஓடாத படங்களையும் ஓட வைத்தவர். பிற்காலத்தில் போதிய வருமானம் இல்லாத காலத்திலும், கையில் இருப்பதை தானமாக வழங்கிய வள்ளல். அத்தகைய உயர்ந்த மனிதரான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறை, சரளமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார், முனைவர் இராம.இராமகுமார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

தமிழாய்வு: தடங்களும் தளங்களும்

தமிழாய்வு: தடங்களும் தளங்களும், முனைவர் சு. தமிழ்வேலு, விலை 250ரூ. தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகளில், 65 தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்ட 1402 கட்டுரைகள் பற்றிய பட்டியல் (கட்டுரை ஆசிரியர், கட்டுரையின் தலைப்பு, ஆண்டு முதலிய விவரங்கள்), இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்கு பயன்படும். நன்றி: தினத்தந்தி, 23/3/2016.   —- வில்லங்கம் இல்லாமல் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது எப்படி, ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 170ரூ. மனை வாங்குதல், அதன் பிறகு பத்திரம் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற அனைத்து […]

Read more

பழனி வரலாற்று ஆவணங்கள்

பழனி வரலாற்று ஆவணங்கள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 200ரூ. இந்த நூலில் பழனிமலை சுப்பிரமணியர் (முருகன்) கோயில், பெரியாவுடையார் கோவில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுக்களையும், பழனிமலை அடிவாரத்தில் உள்ள பல மடங்களைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஆகிய ஆவணங்களையும் தொகுத்து வகைப்படுத்தி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் செ. இராசு, தமிழ்ப் பல்கலைகக்ழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஓயாது கள ஆய்வு செய்து மிகுந்த ஈடுபாடு கொண்டு செய்துள்ள இந்த ஆவணத் தொகுப்பு பல அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள […]

Read more
1 499 500 501 502 503 505