மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ. பாயும் மது; பதுங்கும் அரசு சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை. இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை […]

Read more

இது மடத்துக்குளத்து மீனு

இது மடத்துக்குளத்து மீனு, ஷாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 264, விலை 215ரூ. வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள்தான். நம் வாழ்நாள் முபவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பல்வேறு நிலப்பகுதிகளில் பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, தான் அடைந்த அனுபவங்களையும், கண்டடைந்த வாழ்க்கைத் தரிசனங்களையும், […]

Read more

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்

புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லபாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 424, விலை 325ரூ. பூர்விகம் பாலக்காடு என்ற போதிலும், மயிலாடுதுறையில் வளர்ந்து, தருமையாதீனத் தமிழ் கல்லூரியில் பயின்று, சிறு வயதிலேயே மேடைப் பேச்சிலும், இலக்கியத்திலும் புலமை பெற்று, 1956ம் ஆண்டில், நாகர்கோவிலிலிருந்து விழாவிற்கு தலைமை ஏற்க வந்த ஆறுமுகநாவலரால் (பக். 23) என்பவரால், ‘கீரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட, ‘வைத்தியநாத சுவாமி’ எனும் இயற்பெயர் கொண்ட புலவர் திலகம் கீரனின் வரலாற்றை, வாழ்விலும், இலக்கியத்திலும் துணை நின்ற அவரது மனைவி, […]

Read more

தெளிவு பெறுஓம்

தெளிவு பெறுஓம், பிரபுசங்கர், ந.பரணிகுமார், சூரியன் பதிப்பகம், பக். 231, விலை 160ரூ. இந்த நூலில், ஆன்மிக தேடல்கள் பலவற்றிற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘உடல் மனதைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது மனம் உடலைக் கட்டுப்படுத்துகிறதா’ என்ற வினாவிற்கு தரப்பட்டுள்ள, ‘ஒட்டக குரு’ விளக்கம் (பக். 16), இரவில் படுக்கும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (பக். 24), கார்த்திகை தீபம் கொண்டாடுவதன் தத்துவம் (பக். 35), பீமன், அர்ச்சுனன் இருவரும் செய்த பூஜையில் உள்ள வேறுபாடு (பக். 42), தத்தாத்ரேயர் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொண்ட விவரம் […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. பழந்தமிழர் இலக்கிய வரலாற்றில், பலமுறை பதிவு செய்யப்பட்ட கருத்துகள் ஆயினும், புதுப்பொலிவோடும், இன்றைய நோக்கோடும், நயத்தோடும், இந்த நூலில் கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் உழவும், உணவு முறைகளும், விருந்தோம்பல் பண்பாடும், பசு நேசம், சித்தர் மருத்துவம், விவசாயத்தின் ஏர், கலப்பை, சால், மண்வெட்டி, குதிர், பத்தாயம், எலி பிடிக்கும் கிட்டி ஆகியவையும் விரிவாக்கம் பெறுகின்றன. தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகளும், அதன் வண்ணங்களும் விளக்கப்பட்டு உள்ளன. காந்தி மதுரை […]

Read more

விதைக்குள் ஒரு விருட்சம்

விதைக்குள் ஒரு விருட்சம், புலவர் அ. செல்வராசு, டாக்டர் வ.செ. நடராசன் ஆதிபராசக்தி கிளினிக், பக். 112, விலை 120ரூ. இந்தியாவில் மூப்பியல் மருத்துவ துறை, முதன் முதலில் சென்னை அரசு மருத்துவமனையில்தான், 1978ல் துவக்கப்பட்டது. இந்தியவிலேயே முதன்முறையாக, டாக்டர் வ.செ. நடராஜன் தான் முதன் முதலில் மூபபியல் மருத்துவ துறையில் மேற்படிப்பு முடித்தவர். லண்டனில் சௌத் தாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நடராஜன். முதலில் வெளி நோயாளிகள் பிரிவாக துவங்கப்பட்டு, 1988ல் படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, 2014ல் மண்டல முதியோர் […]

Read more

இனியவளே

இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]

Read more

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!, பொறியாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், போர்வாள் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுடன், அவர் முதல்வராக நிறைவேற்றிய சாதனைகளையும் சுருக்கமாக சொல்வது இந்த நூல். ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ எனும் அந்நாளைய ஆங்கில வார இதழில், ஜெயலலிதாவின் கட்டுரை வெளியானது முதல், திரைப்படங்களில் நடித்தது, அவரின் மொழிப்புலமை, பேச்சாற்றல், அரசியலுக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டது என, ஜெயலலிதாவின் வாழ்க்கை சுவடுகளை எளிமையான நடையில் தந்துள்ளார், நூலாசிரியர். ஆணுக்கு பெண் சமம் என பேசப்படும் இந்த காலத்திலும், ஆணாதிக்கமே மிஞ்சியுள்ள நிலையில், […]

Read more

யுகாந்தா

யுகாந்தா, மராத்தி மூலம் ஜராவதி கார்வே, தமிழில் அழகிய சிங்கர், ஓரியன் பதிப்பகம். இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது! ஜராவதி கார்வே, மராத்தியில் எழுதி ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ள, ‘யுகாந்தா’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலை, தமிழில் நானும் மொழி பெயர்த்துள்ளேன். ஓரியன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. மகாபாரதம், ராமாயணம் இரண்டும் இந்தியர்களின் மாபெரும் காப்பியங்கள். இந்த இரண்டிலும் வரும், பெண் கதாபாத்திரங்களைப் பற்றியதுதான், ‘யுகாந்தா’. இரு காப்பியங்களில் வரும் பெண்களின் […]

Read more

நடிப்பு

நடிப்பு (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 161, விலை 145ரூ. தமிழ் நவீன நாடகத் துறையில் தவிர்க்க முடியாத பெயர், மு. இராமசுவாமி. தான் அவ்வப்போது, அங்கங்கே எழுதிய சற்றே நீண்ட குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். வெற்றுக் குறிப்புகள் அல்ல. அத்தனையும் சுவாரசியம்! ஈ.வெ.ரா., தனிநாயக அடிகள் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள், நாடகம் தொடர்பான வரலாறு- நடப்புப் போக்குகள், நாடக ஆக்கம் பற்றிய அனுபவங்கள், தொட்டுக்கொள்ள கொஞ்சம் சினிமா […]

Read more
1 502 503 504 505