ஈழத்தில் தமிழ் இலக்கியம்
ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ.
ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது.
இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், சமூகப் பண்பாட்டுப் பின்புலமும் குறித்த கட்டுரையும் இடம் பெற்றிருப்பது புத்தகத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.