கண்ணோட்டம்
கண்ணோட்டம், கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 160, விலை 120ரூ.
பத்திரிகைகளில் வரும் மிக அரிதான செய்திகளையும், நம்மை கடந்துபோகும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதுவது ஜீவபாரதியின் தனித்தன்மை.
அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வந்தே மாதரம் வந்த கதை, வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை, கோதையம்மாளுக்கு தியாகி பென்சன் கிடைக்க காரணமாக இருந்த கட்டுரை என்று அத்தனையும் பல்நோக்கு கொண்டு பயனளிப்பதாக உள்ளன.
நன்றி: குமுதம், 19/4/2017.