நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ.
மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன.
மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற சுவாரசியத்துடன் லீப்னெஹ்ட் விவரித்துள்ளார்.
மார்க்ஸைப் போலவே ஜெர்மன் அகதியான அவர் லண்டனில் குடியேறி வாழ்ந்தபோது மார்க்ஸ் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களும் இதில் அடங்கும். பால் லஃபார்க் எழுதியுள்ள குறிப்புகள் லீப்னெஹ்ட் அளவுக்குச் சுவாரசியமாக இல்லாவிட்டாலும், ஒரு இளைஞராக மார்க்ஸைப் பார்த்து வியந்த, அவரது பல்வேறு திறன்களை அருகிலிருந்து உணர்ந்த ஆச்சரியங்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த இவருடைய பதிவுகளையும் வாசிக்க சுவாரசியமான நடையில் ச.சுப்பாராவ் மொழிபெயர்த்துள்ளார்.
– ஆதி வள்ளியப்பன்,
நன்றி: தி இந்து, 5/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818