நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்

நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ், தமிழில் ச.சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், விலை 70ரூ. மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டை முன்னிட்டு, தமிழில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்திய சில புத்தகங்கள் வெளியாகியுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி நண்பர் வில்ஹெம் லீப்னெஹ்ட், மார்க்ஸின் மருமகன் பால் லஃபார்க் ஆகிய இருவரும் எழுதியது “நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்” என்ற நூலாக வெளியாகியுள்ளது. மார்க்ஸின் வாழ்க்கை பற்றி லீப்னெஹ்ட்டின் நினைவலைகள் புதியதொரு சித்திரத்தைத் தருகின்றன. மார்க்ஸ் எனும் மனிதரை அவை மையம்கொண்டுள்ளன. மார்க்ஸின் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைக் கதை போன்ற […]

Read more

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ. பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-1.html மன்த்லி ரெவ்யூ கட்டுரைகள் (1949 – 1998) அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் முதல், போராளி சேகுவேரா வரை எழுதிய பத்திரிகை என்ற பெருமை மன்த்லி ரெவ்யூ இதழுக்கு உண்டு. இதன் ஆசிரியர்களாக இருந்த பால் ஸ்வீசியும் லியோ ஹீயுபர்மேனும் கம்யூனிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். (இதே விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டவர்தான் சார்லி சாப்ளின்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் […]

Read more

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 150ரூ. தேவை ஒரு சுயமதிப்பீடு அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இடதுசாரி மாத இதழான மன்த்லி ரெவ்யூ தனது முதல் ஐம்பதாண்டு காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை தொகுப்பாக வெளியிட்டிருந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டின், சே. குவேரா, நோம் சாம்ஸ்கி என்று நன்கறியப்பட்ட ஆளுமைகளும் அமெரிக்காவின் முன்னணி இடதுசாரி அறிஞர்களும் எழுதிய கட்டுரைகளைக் கொண்ட இத்தொகுப்பை ச. சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோஷலிசம் எதற்கு என்ற தலைப்பில் ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை, கட்டற்ற […]

Read more