அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை

அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, கு.வி. கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் பதிப்பகம், பக். 340, விலை 280ரூ. மனித இனத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என அனைத்துக்கும் பெண்கள் தங்களின் பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. அதை இந்நூல் விளக்குகிறது. மருத்துவத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கி, வேதியியல், உளவியல், புவியியல், கணினிஇயல், உயிரியல், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண் அறிவியலாளர்களின் பங்கு குறித்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது. பிற நாட்டவர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த மரபணு அறிஞரான இ.கே.ஜானகி […]

Read more

ஜென் தொடக்கநிலையினருக்கு

ஜென் தொடக்கநிலையினருக்கு, ஜுடித் பிளாக்ஸ்டோன், ஸோரன் ஜோசிபோவிச், விளக்கப்படங்கள் நவோமி ரோஸன் பிளாட், தமிழில் சேஷையா ரவி, அடையாளம் பதிப்பகம், பக். 162, விலை 160ரூ. நீர்ச் சறுக்கு விளையாடும் ஜென் குரு காட்சி ஊடகத்தின் தாக்கத்தினால் வாசிப்பு மீதான ஈர்ப்பு குறைந்துகொண்டே போகிறது எனும் மனக்குறை தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக உள்ளது. இந்நிலையில், இளம் தலைமுறையினரிடம் வாசிப்பை நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் பல முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. தொடக்க நிலையினருக்கு எனும் அடிக்குறிப்போடு புத்தகங்கள் வெளிவருவது அந்த […]

Read more

மொழியியல் தொடக்கநிலையினருக்கு

மொழியியல் தொடக்கநிலையினருக்கு, டெரன்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, விளக்கப்படம் சூசன் வில்மார்த், அடையாளம் பதிப்பகம், திருச்சி, விலை160ரூ. மொழியியல் ஓர் அறிமுகம் தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மொழியியல் தொடக்கநிலையினருக்கு புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழிச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், […]

Read more

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ. உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்.   —–   ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ. கம்பு, சோளம், வரகு, சாமை, […]

Read more
1 2