ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், […]

Read more

கறை படிந்த கரங்களா?

கறை படிந்த கரங்களா?, (லார்டு ராபர்ட் கிளைவ்) ஆசிரியர் – சக்தி. கிருஷ்ணமூர்த்தி, பி,எஸ்.பவுண்டேஷன், பக்கங்கள் 78, விலை 45 ரூ.   இந்நூல் ராபர்ட் கிளைவ் பற்றிய வரலாற்று நாடகம். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருவதற்கும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றவும் காரணமாகத் திகழ்ந்தவர் கிளைவ். வங்காள கவர்னராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற கொலைகள், கொள்ளைகள், நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணம் கிளைவ். இந்திய மன்னர்களிடம் லஞ்சம் பெற்று, தன்பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் லட்சக்கணக்கான இங்கிலாந்து கரன்சியான பவுண்டுகளை சேமித்தான். தன் உறவினர்களுக்குப் பதவிகளும், […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more