திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள், அழகு பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களில் தொகுப்பு. பக்தி சுவையும், சிறந்த சமய இலக்கியமாகவும் திகழ்கிறது. இந்த நுால், 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் கொண்டது. இதில், 38 சிவ தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முற்றோதல் செய்ய வசதியாக, தெளிவாக பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர்,11/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, முனைவர் ப.பாலசுப்ரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.130 தேர்வாளர்கள் ஒரு கேள்வியை கேட்டு முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். குறுக்கே நீங்கள் பேசக் கூடாது. அது கேள்வி கேட்போருக்கு அதிருப்தியை அளிக்கும். கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றை ஆர்வத்துடன் செவி மடுக்க வேண்டும். முகத்தை உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அளவற்ற ஆர்வம் தான் தேர்வு நடத்துவோரை அதிகமாக ஈர்க்கும். உற்சாகத்தோடு பணி செய்யும் நபர் என்ற நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நுாலாசிரியர் சொல்லும் அறிவுரைகள் பயன் உள்ளவை! […]

Read more

சிவஞான சித்தியார் சுபக்கம்

சிவஞான சித்தியார் சுபக்கம், பொ.முத்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், விலைரூ.350. அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான சித்தியார். இதில் அடங்கிய பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளில், சித்தாந்தப் பார்வையால் சைவக் கோட்பாடு உண்மைகளைப் புலப்படுத்தும் செய்யுள்களால் அமைந்ததே சுபக்கம். சுபக்கம் என்றால், ‘தன் பக்கம்’ என்பதாகப் பொருள் கூறப்படுகிறது. சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட பல உரைகள் இருப்பினும், பல ஆய்வு விளக்கங்களோடு அமைந்த இந்த உரை நுாலில், சிவஞான யோகியின் கருத்தின் […]

Read more

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், பக்.180, விலைரூ.180; கரோனா தீநுண்மியின் தோற்றம், பரவுதல், பாதிப்பு குறித்த நூலாசிரியருடைய கருத்துகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபலங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. பொதுவாகவே சீன அரசைப் பொறுத்தவரை மனித உயிர்கள் புல்லுக்குச் சமம். இதில் அந்நாட்டினுடைய குடிமக்களும் அடக்கம் என்று சீனாவைப் பற்றி கூறும் நூலாசிரியர், ஊஹான் ஆய்வகத்தில் உணவு போட்டு வளர்த்து, பின் உலகம் முழுவதும் கலாட்டா பண்ணச் சொல்லி சீனாக்காரன் ஏவிவிட்ட கூட்டமான்னு சீனாக்காரனுக்கும் அந்த […]

Read more

கந்த புராணம்

கந்த புராணம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலைரூ.150 பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை உரைநடையாக, 43 அத்தியாயங்களில் வழங்கும் நுால். கம்ப ராமாயணத்தைப் போல் ஆறு காண்டங்களைக் கொண்ட கந்த புராணத்தை, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளினார். அவருக்கு முருகப் பெருமானே அடி எடுத்துக் கொடுத்ததுடன், இலக்கணத் தெளிவையும் வழங்கினார் என்பது புராணம். அந்த வரலாற்றை விரிவாகத் தெரிவித்திருப்பதுடன், கந்த புராணச் செய்திகள் அனைத்தையும் எளிய மொழி நடையில் தெரிவிக்கிறது. வள்ளி திருமணத்துடன் நிறைவடையும் கந்த புராணத்தைத் திருத்தணி என்னும் திருத்தலத்துடன் […]

Read more

ஔவைக் குறள் மூலமும் உரையும்

ஔவைக் குறள் மூலமும் உரையும், ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர், அழகு பதிப்பகம், விலைரூ.185, வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக் குறள். அதிகாரத்துக்கு, 10 வீதம், 310 குறட்பாக்கள் அமைந்துள்ளன.பதவுரை, கருத்துரை, விசேஷவுரை என்னும் மூன்று பிரிவுகளில் உரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கம் வழங்கி உள்ளதோடு, மேற்கோளாகப் பட்டினத்தார், வள்ளலார் பாடல்களையும் வழங்கியுள்ளார். இந்தப் பாடல்களிலிருந்து உரையாசிரியரின் புலமை புலப்படுகிறது. திருவள்ளுவர் போல், அவ்வையாரும் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதை இந்த நுால் உணர்த்துகிறது. இந்த […]

Read more

திருப்புகழ்த் திருத்தலங்கள்

திருப்புகழ்த் திருத்தலங்கள், ஆ.கோமதி நாயகம், அழகு பதிப்பகம், விலைரூ.350 மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள், முருகன் தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் வரலாற்றோடு மாவட்டங்கள் தோறும் இத்தலங்கள் அமைந்துள்ள விபரமும் அடங்கி இருக்கிறது. முருகனுக்கு உரிய மந்திரங்கள், யந்திரங்கள், விரதங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030996_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலைரூ.170. இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம். சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு. வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் […]

Read more

தமிழகக் கலைகள்

தமிழகக் கலைகள், மா. இராசமாணிக்கனார், அழகு பதிப்பகம், விலை ரூ.100. ஆயகலைகள், 64 என்பர். 11 வகையான தமிழக கலைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நுால். கலை படைப்புகளாக விளங்குபவற்றை விவரிக்கிறார். முதலாவது எழுதியுள்ளது கட்டடக்கலை. இதன் அழகையும், நுட்பத்தையும் விளக்கியுள்ளார். தொடர்ந்து ஓவியம், சிற்பம், வார்ப்பு, இசை, நடனம், நாடகம், மருத்துவம், சமயம், தத்துவம், இலக்கியம் என, தனித்தனியே கலைகளை விவரிக்கிறார். நுட்பமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அழகுற வெளிப்படுத்துகிறது இந்நுால். படிப்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறது. பல […]

Read more

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும்

ஸ்ரீ வாராகி அம்மன் வழிபாடும் பரிகாரங்களும், சுந்தர் பாலா, அழகு பதிப்பகம், பக். 224, விலை 210ரூ. வேண்டியதைவாரி வழங்கும் ஸ்ரீவாராகி அம்மனைவழிபடும் முறை, தோத்திரங்கள், பரிகாரங்கள், வரலாற்று புராண பின்னணி ஆகியவை இதில் உள்ள சிறப்புகள் அனைத்தையும் ஆசிரியர் அழகாக தொகுத்து உள்ளார். அம்மனுக்கு நைவேத்யம், மலர்கள், தொழும் பொழுது, உபாசனை முறை, அதற்கான மந்திரங்கள், பண்டாசுரன் என்ற அரக்கனின், தவறான விருப்பங்கள், அதை பராசக்தி முடித்த விதம் ஆகியவை இதன் மையக் கருவாகும். இதற்கு தேவி மகாத்மியம் கூறும் மையக் கருத்துக்களை […]

Read more
1 2 3 4 6