அந்த நிருபரின் பேனா…

அந்த நிருபரின் பேனா…, ஆர்.நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.195, விலை ரூ.175. நூலாசிரியர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை மூன்றாம் நபர் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “ஹிந்து’ ஆங்கில நாளிதழின் தென்னாற்காடு நிருபராகவும், பின்னர் உதவி ஆசிரியராகவும் நூலாசிரியர் பணியாற்றியுள்ளார். புதிதாக நிருபர் பணி ஏற்பவர்களை செய்தி சேகரிக்க அப்போதெல்லாம் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புவார்கள். நூலாசிரியர் நிருபர் பணியும் சென்னை பொது மருத்துவமனையின் பிணவறையில்தான் தொடங்கியிருக்கிறது. இறந்தவரைப் பற்றிய தகவலைத் திரட்டியது முதல் செய்தியானது. சாரணர் இயக்கத்தின் இலட்சிய வாசகம் “தயாராக இரு’. நிருபர்களுக்கும் […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.352, விலை ரூ.300.  குடும்பத்தோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் நாம், நமக்காகப் பணி செய்வதாலேயே குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாட இயலாதநிலையில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களையும் நமது கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை கூறும் கட்டுரையில் தொடங்கி, ரஜினிகாந்த் இந்தியப் படவிழாவில் கெளரவிக்கப்பட்டது, தமிழ் நாளேடுகளில் இடம் பெறும் விளம்பரங்களில் தமிழ் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது, தமிழ்ப் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பில் உள்ளவாறு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று மாநில […]

Read more

சிறகை விரி பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130. ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உலகின் சகல விஷயங்களையும் பார்க்கும் நூலாசிரியரின் 31 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நமது பாரம்பரிய சிந்தனைகள், முன்னோரின் வாழ்க்கைமுறைகளை இன்றைய வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து தெளிவான புரிதல்களை இந்நூல் வழங்கியுள்ளது. அநீதியான எதையும் எதிர்க்கும் பண்பு நூல் முழுவதும் இழையோடி இருக்கிறது. பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய பல விஷயங்கள் ஓரிரு வரிகளிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ” கண், […]

Read more

சிறகை விரி, பற!

சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், 1899 வரை அவன் எழுதிய […]

Read more

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.

மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. இது எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகம் அல்ல என்று முதலிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது என்றாலும் இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆர். பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் பெட்டகமாக அமைந்து இருக்கிறது. 1949-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி, எம்.ஜி.ஆரின் வம்சாவளி என்ன என்பது பற்றிய வரலாற்று தொடர்பான ஆய்வு, எம்.ஜி,ஆரை ஜெயலலிதா கண்ட பேட்டியின் முழுவிவரம், எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், எம்.ஜி.ஆரின் ஆன்மிக கருத்து […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 160ரூ. ராமானுஜரின் எண்ணங்கள் சம காலச் சிந்தனைக்கு மிகவும் பொருந்தி வரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது இந்நாடகம். வைணவ நெறியைப் பாமரரும் அறியும் வண்ணம் அச்சமயத்தின்பால் மக்களைத் திருப்பியதில் ராமானுஜரின் பங்கு குறிப்பிடத்தக்து. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அணுகுமுறை ஏழை எளியவரையும் சென்றடைந்தது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்ட தருணத்தில் இந்நாடகம், இரண்டாவது பதிப்பாக வந்தாலும், இந்திரா பார்த்தசாரதியின் நாடக ஆக்கம், படிக்கத் துாண்டும் விதத்திலும், ராமானுஜரின் பணியைப் போற்றும் […]

Read more

தாய்

தாய், மாக்சிம் கார்க்கி, தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 608, விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், […]

Read more

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை,  ப.சிதம்பரம், தமிழில்: ஆர். வெங்கடேஷ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.300. ஜனநாயகத்தில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை, பிரச்னைகளை, கொள்கைகளை விமர்சித்து எழுதி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார ஆளுமையுமான ப. சிதம்பரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2017-இல் வாரந்தோறும் எழுதிய 53 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி ஜி.எஸ்டி வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கை எவ்வளவு தவறானது;அது தனி […]

Read more
1 2 3 8