சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவிந்தீரநாத் தாகூர், தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்ய அகாடமி வெளியீடு, பக். 288, விலை 175ரூ. தாகூர் நல்ல படைப்பாளி. கவிதை, கதை, நாடகம் போன்றவற்றில் முத்திரை பதித்தவர். அவர், இந்த சிறுகதைத் தொகுதியில், பெண்கள் தம் வாழ்க்கைப் போக்குகளில் எதிர்கொள்ளும் கொடுமைகள், துயரங்கள், தன்னிச்சையான மனநிலை, இவற்றோடு லட்சியத்தாகம் முதலானவற்றை வெளிப்படுத்தியுள்ளார். பெண்களை மையப்படுத்திய இச்சிறுகதைகள் யதார்த்தமான தளத்தில் நகர்கின்றன. தாகூரின் கதைகளில் பெண்களுக்கான பரிவும், பாசமும் பல கதைகளில் தென்படும். இந்நூலில் அமைந்துள்ள பத்துக் கதைகளும் […]

Read more

அவமானம்

அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ. மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை […]

Read more