வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு

வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், விலை 350ரூ. தமிழ்நாட்டின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி. தமிழ் உணர்வுடன் இந்த நூலை அவர் எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்று உறுதிபடக் கூறுகிறார். “உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது தென்னிந்தியாவில்தான்” என்று சர்ஜான்ஸ் இவான்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். “குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் அமிழ்ந்தபோது, அதில் வசித்த மக்கள் எட்டுத் […]

Read more

வரலாற்று உண்மைகள்

வரலாற்று உண்மைகள் தமிழ் மண் தமிழர் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், பக் 348, விலை 350ரூ. தொல்லியல், கல்வெட்டு ஆராய்ச்சியாளரான நூலாசிரியர், தனது 30 ஆண்டுகால ஆராய்ச்சியின் பயனாக வரலாற்று உண்மைகள் என்ற தலைப்பில் தமிழ் மண், தமிழர், தமிழ் வரலாறு தொன்மைக்காலம் முதல் கி.பி. 1947-ஆம் ஆண்டு வரையில் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் தொன்மைகளை அகழ்வாய்வு, கல்வெட்டு, மொழியாய்வு வல்லுநர்களின் கருத்துகளைக் கொண்டு விவரிக்கிறார் நூலாசிரியர். தமிழ் மன்னர்களைப் பற்றியும், அவர்களது உணர்வுகள் குறித்தும் “நந்திக்கலம்பகம்’‘ நூலின் மூலம் […]

Read more