தேவேந்திரர்களின் கதைகள்

தேவேந்திரர்களின் கதைகள், தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.120. வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து, ஆய்வு ஏடுகளுக்கு பயன்படுத்திய பெருமக்களின் குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் நுால். நெல்லை முதலில் பயிராக கண்டவர்கள் என்பதுடன், தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தான் மழை மற்றும் உழவுத் தொழிலின் கடவுள் எனச் சொல்கிறது. அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வட்டார வழக்கு மொழிச்சொற்களில் அமைந்துள்ளது சிறப்பு. – சீத்தலைச்சாத்தன். நன்றி: தினமலர்,8/8/21 இந்தப் […]

Read more

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு

பள்ளு இலக்கியம் மறுகட்டமைப்பு,  தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம், பக். 253,  விலை ரூ.270. பள்ளு இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இலக்கியங்களில் மருத நில மக்கள், மள்ளர்களின் வீரம், பெருமை, ஆட்சி அதிகாரம், வரலாற்று கதைகள் ஆகியவை இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்த மள்ளர்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களால் பட்டியலினத்திற்குக் கொண்டுவரப்பட்ட விதமும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்களின் வாழ்வியல் முறைகள், குலப் பெயர்கள், குடும்ப முறைகள், அவர்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை எளிய தமிழில் நூலாசிரியர் […]

Read more

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம்,  பக்கம் 160,  விலை ரூ.170 . கடந்த 2000-ஆம் ஆண்டு மள்ளர் சமூக வரலாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது தேவேந்திரகுல வேளாளர் வரலாறு என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் […]

Read more