செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள்

செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியச்கூறுகள், வே.நிர்மலர் செல்வி, நெய்தல் பதிப்பகம், பக். 272, விலை 300ரூ. ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது. நாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் […]

Read more

தேவார யாப்பியல்

தேவார யாப்பியல், அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.576, விலை ரூ.550. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல்களில் இசைப் பாடல்களே அதிகம். இவை பண் முறையில் பிரித்துப் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளுக்கு உறுப்பாக அமைகின்றன. இவற்றில் தொடை என்பது ஒலிப்பு முறையால் செய்யுளுக்கு இனிமை தருகின்ற உறுப்பாகும். தொடைகளுள் எதுகை, மோனை ஆகிய இரண்டுமே சிறப்பானவை. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் இதன் சிறப்பை (செய்யுள் 94) எடுத்துரைக்கிறார். அவ்வகையில், தேவாரப் பாடல்களில் […]

Read more

தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள்

தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள் (பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்), அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. வெவ்வேறு பொருள் சார்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட விலாச நாடகங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு நாடகப் பிரதியாக இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றன. அப்போது பதிப்பிக்கப்பட்ட நளவிலாசம், சகுந்தலை விலாசம், டம்பாசாரி விலாசம் உள்ளிட்ட பல விலாச நாடகங்களின் சமூகப் பின்னணியை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். டம்பாசாரி விலாசம் போன்ற நாடகங்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார். […]

Read more

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு, ஜோ.சம்பத் குமார், நெய்தல் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130. “பிரான்சில் ஒயிட் எல்லீஸ்‘’ தமிழ் ஒலிக்கேற்ப தன் பெயரை “எல்லீசன்‘’ என்று மாற்றிக் கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறைத் துணைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்டிரேட், நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் முதலிய பல உயர் பதவிகளை வகித்தவர். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்தவர். திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால், திருவள்ளுவரின் […]

Read more

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி

பாவலரேறு பெருஞ்சித்தனார் பாடல்களின் யாப்பமைதி, ஜெ. மதிவேந்தன், நெய்தல் பதிப்பகம், பக். 208, விலை 130ரூ. தனித்தமிழ் இயக்கத்தின் அறிஞர் பெருமக்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் பெருஞ்சித்திரனார். இதழாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்துப்பணியில் அயராது ஈடுபட்டிருந்தவர். பெருஞ்சித்திரனாரின் இலக்கிய-இலக்கணக் கூறுகளையும் பாவினங்களையும் இந்நூல் ஆராய்கிறது. மக்களில் உயர்வு-தாழ்வைப் படைத்தவர்கள் பாவினங்களிலும் யார் எந்தப் பாவினத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், பெருஞ்சித்திரனார் இதைத் தகர்த்தெறியும்படியாக, தமிழிலுள்ள அனைத்துப் பாவினங்களையும் பயன்படுத்திப் பாடினார். மேலும், அவர் பயன்படுத்திய யாப்பு வடிவங்களையே முதன்மைப் பொருளாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது. […]

Read more