தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், அர்ஜித் பதிப்பகம், விலை 460ரூ. பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும், உரைநடைகளிலும் உள்ள கடினமான சொற்களுக்குப் பொருள் தெரியாமல் இனியும் அவதிப்படத் தேவை இல்லை என்ற நிலையை இந்தப் புத்தகம் தருகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படி ஆவணப்படுத்தி அந்தச் சொற்களுக்கு எளிய விளக்கத்தை இந்த நூல் தருகிறது. நல்ல வழிகாட்டி போல அமைந்து இருப்பதால், இந்த நூல், பழைய இலக்கியங்களைப் பொருள் உணர்ந்து படிக்க மிக்க பயன் உள்ளதாக இருக்கும். […]

Read more

தமிழ் நூல் வரலாறு

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக். 458, விலை 300ரூ. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74 தலைப்புகளில் இந்த நுால் விளக்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும், சைவ மடங்களின் தமிழ்த் தொண்டினையும், தனித்தனித் தலைப்புகளில் விளக்குவது இந்த நுாலின் சிறப்பு. தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகச்சிறந்த கையேடாக விளங்கும் இந்த நுால் மிக எளிய தமிழ் நடையில் […]

Read more

தமிழ்மந்திரம்

தமிழ்மந்திரம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 275ரூ. உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழகத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு, சங்க காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது. தமிழ் மொழியும் தமிழ் நூல்களும் எந்த முறையில் சிறப்புப் பெற்று வளர்ந்தன என்பவை போன்றவற்றின் அரிய தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. தமிழகத்தின் முற்கால, இடைக்கால, மற்றும் பிற்கால நூல்கள், அவற்றின் ஆசிரியர்கள் ஆகியவற்றுடன் தற்கால புலவர்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம்பெற்று இருக்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் மொழி ஆய்வு […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு),  பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300. தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை […]

Read more