சங்கமி பெண்ணிய உரையாடல்கள்

சங்கமி பெண்ணிய உரையாடல்கள், ஊடறு றஞ்சி, புதிய மாதவி, காவ்யா வெளியீடு, விலை 400ரூ. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பிரபலமான பல பெண்களின் நேர்காணல் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஊடறு என்ற அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, இந்தியாவைச் சேர்ந்த புதிய மாதவி ஆகியோரால் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் மனக்குமுறல்களையும் இந்த நேர்காணல்களில் அப்பட்டமாகக் கொட்டி இருக்கிறார்கள். பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கும் ஆண்கள், ஓரினச் சேர்க்கை, பெண்களின் மது […]

Read more

பெண்ணுடல் பேராயுதம்

பெண்ணுடல் பேராயுதம், புதிய மாதவி, இருவாட்சி, பக். 120, விலை 100ரூ. பெண் என்னும் ஆதித்தாய் வழியே, இந்த சமூகம் எவ்வாறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஆட்படுகிறது என்பதையும், அவள் ஏன் உலகின் முக்கியமான படைப்பாக்கப்பட்டு, பின் நிலவைப் போல, மறைந்து போகிறாள் என்பதை, ஒரு பெண்ணாக வெளிப்படுத்துகிறார் புதிய மாதவி. பெண்ணுடல் பேராயுதம், பெண்களுக்கு பிடிக்கும் ஆயுதம். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

மௌனத்தின் பிளிறல்

மௌனத்தின் பிளிறல், புதிய மாதவி, எழுத்து. புதிய மாதவி திருநெல்வேலிக்காரர் என்றாலும் தற்போது மும்பைவாசி. பன்னாட்டு வங்கிப் பணிக்குப் பின் விருப்ப ஓய்வில் விருப்பம் போல் கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என எழுதி வருகிறார். சாகித்ய அகாடெமி, மும்பைத் தமிழ்ச்சங்கம், பத்திரிகை, இலக்கிய மேடை, கருத்தரங்கு, எழுத்தாளர் சந்திப்பு, பல்கலைக்கழகம், மண்டலம் என்று பல தளங்களில் தன் இலக்கியப் பங்களிப்புகளைச் செய்து வருகிறார். பாரீஸ், இலங்கை என்று பெண்களின் சந்திப்பிலும் கலந்து வருகிறார். ‘மௌனத்தின் பிளிறல்’ இவரது புதிய […]

Read more