சிகரம் தொடுவோம்

சிகரம் தொடுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 192, விலை 145ரூ. ஒரு மனிதனின் எண்ணத்தையும், செயலையும் செம்மைப்படுத்துவதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. ஒருவனின் மனதையும் செயலையும் எவ்வாறு தூய்மைப்படுத்துவது? தோல்வியிலிருந்து எதிர் நீச்சல் போட்டு எப்படி வெற்றி பெறுவது? துன்பங்களை எப்படிக் கடப்பது? என்பனவற்றைத் தெளிவுபடுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு செயலால் பிறருக்குத் துன்பம் ஏற்படக்கூடாது. விமர்சனங்கள் ஒருவருடைய முன்னேற்றத்திற்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும். ஆகவே விமர்சனங்கள் எப்போதும் ஆரோக்கியமானவையாகவே இருக்க வேண்டும். செய்யும் செயலில் […]

Read more

அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம், ப. முத்துக்குமார சுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 100ரூ. இந்து மதத்தின் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் அருமை பெருமைகளை விளக்குவதோடு தனி மனித உயர்வுக்கும் நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வேதங்களை மேற்கோள் காட்டி எழுதி இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.   —-   தகவல்கள் 42, அமரர் கோ. தென்கச்சி சுவாமிநாதன், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி அவென்யூ, திருமலைநகர், அனெக்ஸ் பெருங்குடி, சென்னை 96, பக். 160, விலை 90ரூ. […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பு-சா. கந்தசாமி, சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, க.நா.சு.வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா. கந்தசாமி, க.நா.சு.வின் 24 சறுகதைகளைத் […]

Read more