திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் தெளிவுரை, முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.100. திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினமலர், 29/12/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார்,முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.80 திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக் காட்டுகிறது. திருமால் பற்றிய அறிமுகம், ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுடன் துவங்குகிறார். பத்து ஆழ்வார்களுடன், மதுரகவியும், ஆண்டாளும் பின்னர் சேர்க்கப்பட்டனர் என்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 3,776 பாடல்களே உள்ளதையும் கூறுகிறார். சோழன், வேல் வழங்கிய வரலாறு, நாகை, பொன் புத்தர் சிலையை, திருவரங்கம் திருப்பணிக்காக எடுத்தது, வாடினேன் வாடி வருந்தினேன் என்று பாடியது போன்ற அரிய செய்திகளால் நிரம்பியுள்ளது. மனம் […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், விலைரூ.300 வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை […]

Read more

சங்க கால வானிலை

சங்க கால வானிலை,  கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், பக்.272, விலை ரூ.300. நவீன வானிலையியல் காற்றைப் பற்றி, மேகத்தைப் பற்றி, மழையைப் பற்றி, காலநிலையைப் பற்றி, வானிலை பற்றி வைத்துள்ள அறிவியல் வரையறைகள் நூலில் விளக்கப்படுகின்றன. அந்த வரையறைகளுக்குப் பொருந்துவிதமாக சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் தகவல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக காற்றைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.  வடக்குத் திசையிலிருந்து வீசும் காற்றை வாடை, வடந்தை, ஊதை எனவும், கிழக்கிலிருந்து வீசும் காற்றை ;கொண்டல் எனவும், மேற்கிலிருந்து வீசும் காற்றை கோடை எனவும், தெற்கில் […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை ராசபாண்டியன், முக்கடல், பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை வளர்த்தால் […]

Read more