அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி ஊட்டிய தனிப்பெரும் வள்ளல் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழ்மக்களும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். அண்ணாமலை அரசரின் கல்விப் பணியும் பொதுப் பணியும் பொதுப் பணியும் உலகம் நன்கு அறிந்த ஒன்றே என்றாலும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு.அருணாசலம் பிள்ளை, பதிப்பாசிரியர் ஆறு. அழகப்பன், முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அன்ன சத்திரம் கட்டுவதைவிட கல்விக்கூடம் அமைப்பது புண்ணியம் தருவது என்று கூறுவர். ஆனால், அன்ன சத்திரமும் கட்டி, கல்விக்கூடங்களையும் அமைத்து, மருத்துவசாலைகளையும் ஏற்படுத்தி, தமிழிசைக்கென சங்கம் நிறுவி, கோயில்களை உருவாக்கி குடமுழுக்கும் செய்வித்து, அரசாங்கப் பணியலமர்ந்து மக்கள் பணியும் மேற்கொண்ட ஒருவர் உண்டென்றால் அவர் அரசர் அண்ணாமலை செட்டியாராகத்தான் இருக்க முடியும். அவருடைய வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் தனித்தனியே […]

Read more

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள்

இந்து தர்மத்தின் மேன்மையான வாழ்க்கை முறைகள், ஆற்காடு ஸ்ரீநாத், டாக்டர் பாலசந்தர், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ. பிரம்மம், மனிதன், ஆன்மிகம், தியானம், பக்தியோகம் உள்பட 14 தலைப்புகளில் இந்து தர்மத்தின் மேன்மையான தகவல்கள் தொகுக்கப்பட்ட நூல். படித்து கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 13/4/2016.   —- அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், விலை 100ரூ. தம் முயற்சியால் பெரும் பொருள் ஈட்டி, அப்பொருளைக் கல்வி வளர்ச்சி மற்றும் […]

Read more