அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ. இந்த உலகில் குழந்தைத்தனம்தான் கள்ளமற்றது. விருப்பு வெறுப்புகள் சாராதது. பயமற்றது.யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதது. ஆனால், குழந்தைத் தனத்துடன் இருப்பதை அறியாமை என்றும் அதிலிருந்து விடுபடுவதுதான் நல்லது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தவறு, அப்படிப்பட்ட அறியாமையில் இருந்து விடுபட்டு, மீண்டும் களங்கமற்ற தன்மைக்கு மாறுவது எப்படி என்பதையெல்லாம் ஓஷோ சொன்னவற்றை எளிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், சுவாமி சியாமானந்த். பல தேடுதல்களுக்கு விடைதரும் தெளிவான புத்தகம். நன்றி: குமுதம்,19.9.2018.   இந்தப் புத்தகத்தை […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more