அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. அமெரிக்காவில் ஓஷோ தனது சீடர்களுடன் இருந்த வாழ்க்கை, அரசியல்வாதிகளை நடுங்க வைத்த அவரது உரை, மக்களை மாற்றிய அவரது சிந்தனைகள், அவரை எதிர்த்த அரசியல்வாதிகளுக்கு தனது சொற்பொழிவுகளில் பதில் அடி கொடுத்து, அதற்கான கேள்விகள், பதில்கள் என்று ஓஷோவிற்கே உரிய கடுமையான அதே சமயம் நகைச்சுவையான பேச்சினை உள்ளடக்கியது இந்நூல். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம் (கௌதம புத்தரின் பிரக்ஞா பரமிதா இதய சூத்திரம்), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 448, விலை 350ரூ. இந்நூலில் பத்து தலைப்புகளில் கூறப்பட்டுள்ளவற்றை ஓரிரு பத்திகளில் விளக்கிவிட முடியாது. பக்கத்திற்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்து, திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் நூல். ‘நான் ஒரு புத்தர்’ என்னும் எண்ணம் உங்களுக்கு இருக்கட்டும். மேலும் இந்த ‘நான்’ என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ‘நான்’ மற்றும் புத்தநிலை ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. வெளிச்சம் உள்ளே வரும்போது இருட்டானது […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ. தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ. தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து […]

Read more