எத்திசையும் தமிழ்

எத்திசையும் தமிழ், திருக்குறள் பதிப்பகம், விலை 200ரூ. இந்நூல் சேர நாடாக இருந்த கேரளத்தின் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட இலக்கிய வரலாற்றை முரசறைந்து தமிழுலகிற்கு அறிவிக்கின்றது. சங்க காலத்திலிருந்து விடுதலைக்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் படைப்புகளை வகுத்தும், தொகுத்தும் ஆய்வு செய்கின்றது. மலையாள நாட்டில் தாய்த்தமிழ் பொலிவோடு சிறப்புற்றிருப்பதைக் கண்டறிகின்றது. கேரளத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவுகள் விளக்கப்படுகின்றன. கேரளத்தின் இன்றைய விழாக்களான திருவோணமும், திருவாதிரையும் தமிழரின் பழம்பெரும் விழாக்கள் என சுட்டப்படுகின்றது. கேரளத்தில் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள், அகத்தியம், […]

Read more