கிருஷ்ண காவியம்

கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலைரூ.250. கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், […]

Read more

உணவு யுத்தம்

உணவு யுத்தம், எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 240ரூ. நமது உடல் நலக் குறைபாட்டுக்கு, மாறிப்போன முறையற்ற உணவு முறையே காரணம். உணவின் பெயரால் நாம் நாள்தோறும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி 40 கட்டுரைகளின் தொகுப்பு. பிரபலமாகி வரும் துரித உணவகங்கள் உடல நலத்திற்கு பிராதன கேடு விளைவிக்கும். எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம். மரண விலாஸ்களாக மாறிவிட்ட சாலையோர மோட்டல்கள், ஆயுளைக் குறைக்கும் ஆயில் (எண்ணெய்) உணவுகள், வயிற்றைப் புரட்டிப் போடும் புரோட்டாக்கள், நகரம் […]

Read more