திருமுருகாற்றுப்படை விளக்கம்
திருமுருகாற்றுப்படை விளக்கம், கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300. திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் […]
Read more