நீர் கொத்தி மனிதர்கள்

நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ. தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின் நிதியுதவி பெற்று வெளியிடப்படும் இந்த நாவல், ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடத்தில் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் சில ஆதிக்க சாதி மதத்தினருக்கும், சாம்பாக்கமார்களுக்கும், அவர்களால் ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களும், முரண்பாடுகளும் தான் நாவலின் கதை. தண்ணீருக்கான போராட்டம். தலித் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more