நீர் கொத்தி மனிதர்கள்
நீர் கொத்தி மனிதர்கள், அபிமானி, காவ்யா, சென்னை, பக். 318, விலை 250ரூ.
தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை இலக்கியப் பணிக்கான அமைப்பின் நிதியுதவி பெற்று வெளியிடப்படும் இந்த நாவல், ரத்தக் கண்ணீரை வரவழைக்கும் தன்மை கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் இடத்தில் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் சில ஆதிக்க சாதி மதத்தினருக்கும், சாம்பாக்கமார்களுக்கும், அவர்களால் ஒதுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களும், முரண்பாடுகளும் தான் நாவலின் கதை. தண்ணீருக்கான போராட்டம். தலித் இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 18/5/2014.
—-
ஊர் வரலாறு பந்தல்குடி, பேரா. எஸ். ஆர். விவேகானந்தம், குளோபல் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ.
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஊர், பிரிட்டிஷ்காரர்கள் முகாம் அமைத்து போரிட்டு, நம் ஆட்சியாளர்களை அகற்றிய தலம் என்று பல ஆதாரபூர்வ தகவல்களை தந்திருக்கிறார் ஆசிரியர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊர், வரலாறுகள் நிரம்பிய ஊர் என்பதை அழகாக தொகுத்த ஆசிரியர் பாராட்டிற்குரியவர். பிரிட்டிஷார் எழுதிய வரலாற்றுத் தகவல்கள் ஒரு சார்பாக இருந்திருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் பல உண்மைத் தகவல்கள் இதில் உள்ளன. -தவசி. நன்றி: தினமலர், 18/5/2014.