ஊடகச் சட்டங்கள்

ஊடகச் சட்டங்கள், சந்திரிகா சுப்ரமண்யன், சந்திரோதயம் பதிப்பகம், விலைரூ.250. ஊடக சட்டங்கள் மற்றும் அறங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம், 16 தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடையில் புரியும் வகையில், குறுந்தலைப்புகளில் நேரடி அடுக்கமைவு முறையில் தகவல்கள் அமைந்துள்ளன. ஊடகம் பற்றி மகாத்மா காந்தியின் பொன்மொழியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, நான்காவது துாண், இந்தியாவில் ஊடக சுதந்திரம் போன்ற விபரங்கள் தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியில் ஊடக சுதந்திரம் தனி இயலாக உள்ளது. ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் வணிகம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை, […]

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ. நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக,  79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். […]

Read more