தலைவன் இருக்கின்றான்
தலைவன் இருக்கின்றான், நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, பேரிளம் பதிப்பகம், எண்-கிருட்டிணா நகர், பம்மல், சென்னை 75, விலை 120ரூ. சிவாஜியை நடிகர்திலகமாக நேசித்தவர்கள்கூட, அவர் தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலம் அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தி.மு.க. தலைவர் அண்ணாவின் இதயத்தில் முதல் தம்பியாக இருந்தவர், பிறகு அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறி காங்கிரசுக்கே எல்லாமுமாய் ஆனார். பெருந்தலைவரன் அன்பைப் பெற்ற சிவாஜி, காங்கிரஸ் கட்சிக்காக தன் வருமானத்தின் பெரும்பகுதியை செலவிட்டு கட்சி வளர்த்த தகவல்களை நூலாசிரியர் விவரித்திருக்கும்விதம், நிஜமாகவே அதிர்ச்சிப் பக்கங்கள். […]
Read more