மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும்

மாமல்லபுரத்தில் மங்கையும் சிற்பியும், வானதி பதிப்பகம், விலை 200ரூ. பல்லவ பேரரசின் சம்பவங்களின் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நாவல். இளம் சிற்பி மதிஒளியும் ஆடலரசி மலர்விழியும் முதற் சந்திப்பிலேயே மோதிக்கொள்கிறார்கள். கருத்துக்களால், கலைத்திறன் கொடுத்த துணிவால், இளமைத் துடிப்பால் அவர்கள் ஒருவரையொருவர் வெல்லப் பார்க்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி வெற்றி தோல்வி என்று நிர்ணயிக்க முடியாமல், காதல் உள்ளங்களைப் பிரிக்காமல், திரைப்படத்திற்கு ஏற்றதாக இந்த சரித்திர நவீனத்தை அமைத்துள்ளார் பட அதிபர், டைரக்டர், கதை வசன கர்த்தா ஏ.வி. நாகராஜன். […]

Read more